தேவனுடைய வசனத்தைக் கேளுங்கள்
நாம் இரட்சிக்கப்படும் விதம்
“எனவே, விசுவாசம் கேட்பதினாலே வரும்,
தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே விசுவாசம் வரும்.”
ரோமர் 10:17
“ஒன்றைமட்டும் உங்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன்;
நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ,
எதினாலே ஆவியானவரைப் பெற்றுக்கொண்டீர்கள்?”
கலாத்தியர் 3:2
“அன்றியும் உங்களுக்கு ஆவியானவரைக் கொடுத்து, உங்களுக்குள்ளே அற்புதங்களைச் செய்கிறவர்
அதை நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ,
விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே செய்கிறார்?”
கலாத்தியர் 3:5
“எனவே, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
அவரை விசுவாசிக்காதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்?
அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?
பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?”
ரோமர் 10:13-14
“நீங்களும் உங்களுடைய இரட்சிப்பின் நற்செய்தியாகிய சத்திய வசனத்தைக்கேட்டு,
விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட
பரிசுத்த ஆவியானவரால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.”
எபேசியர் 1:13
“கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும்,
பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,
பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி,
எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்;
அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து,
நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல்,
அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது;”
கொலோசெயர் 1:3-6
கவனியுங்கள்: தேவனுடைய வசனம் இரட்சிப்பையும் ஆவிக்குரிய வளர்ச்சியையும் கொண்டுவருகிறது.
பரிசுத்தவான்களுக்கு
“நீங்களும் எங்களோடு ஐக்கியம் உள்ளவர்களாகும்படி,
நாங்கள் பார்த்தும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்;
எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும்
அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.”
1 யோவான் 1:3
“என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது;
நான் அவைகளை அறிந்திருக்கிறேன்,
அவைகள் எனக்குப்பின் செல்லுகிறது.
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்;
அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை,
ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை.”
யோவான் 10:27-28
“இந்தத் தீர்க்கதரிசன வசனங்களைப் படிக்கிறவனும், கேட்கிறவர்களும்,
இதில் எழுதியிருக்கிறவைகளின்படி நடக்கிறவர்களும் பாக்கியவான்கள்,
காலம் நெருங்கிவிட்டது.”
வெளிப்படுத்தின விசேஷம் 1:3
பிரச்சனை: கேட்டும், செய்யாமல் இருத்தல்
“இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன்
பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாக இருக்கிறாய்;
அவர்கள் உன்னுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்;
ஆனாலும் அவைகளின்படி செய்யாமல்போகிறார்கள்.”
எசேக்கியேல் 33:32
“அல்லாமலும், நீங்கள் உங்களை ஏமாற்றாதபடிக்குத்
திருவசனத்தைக் கேட்கிறவர்களாக மாத்திரமல்ல,
அதின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.”
யாக்கோபு 1:22
“ஆனால், சுதந்திரம் கொடுக்கிற பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து,
அதிலே நிலைத்திருக்கிறவன்
கேட்கிறதை மறக்கிறவனாக இல்லாமல்,
அதைச் செய்கிறவனாக இருப்பதினால்
அவன் பாக்கியவானாக இருப்பான்.”
யாக்கோபு 1:25
“ஏனென்றால், நற்செய்தி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது;
கேட்டவர்கள் விசுவாசம் இல்லாமல் கேட்டதினால்,
அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கவில்லை.”
எபிரெயர் 4:2
ஆகவே, இவைகளைத்
தவிர்க்க நாம் தீர்மானிக்கவேண்டும்:
- “கேட்கிறதை மறக்கிறவனாக” இருத்தல் (யாக்கோபு 1:25)
- “திருவசனத்தைக் கேட்கிறவர்களாக” மாத்திரம் இருத்தல் (யாக்கோபு 1:22)
- “அதின்படி செய்யாதவனானால்” (யாக்கோபு 1:23)
- “அவர்கள் உன்னுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமல்போகிறார்கள்” (எசேக்கியேல் 33:32)
உதாரணமாக,
“யெகோவா மனாசேயோடும் அவனுடைய மக்களோடும் பேசினபோதிலும்,
அவர்கள் கவனிக்காதே போனார்கள்.”
2 நாளாகமம் 33:10
மேலும்
“அவர்களோ கவனிக்க மனதில்லாமல்
தங்கள் தோளை முரட்டுத்தனமாக விலக்கி,
கேட்காதபடிக்குத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டார்கள்.”
சகரியா 7:11
சுய ஆய்வுக்கான ஒரு முறை:
சபையிலோ, வேதாகமப் படிப்பிலோ, தொலைக்காட்சியிலோ, மற்றவர்கள் தேவனுடைய வசனத்தைப்
போதிக்கும்போது நான் அதைக் கேட்கிறேன் – நான் நல்லமுறையில், பலன்தரும்படி கேட்கிறவனாக இருக்கிறேனா?
நீங்கள் வசனத்தைக் கேட்பது எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்கப் பின்வரும் முறை
பரிந்துரைக்கப்படுகிறது.
- நான் எதிர்பார்ப்புள்ள இருதயத்தோடு கூடுகைக்குச் செல்லும்படி, தேவன் என்னோடு பேசவும், நான்
வாழ்வதற்காகத் தம்முடைய வசனத்திலிருந்து எதையாவது எனக்குத் தரவும் வேண்டி ஜெபிக்கிறேனா
(சங்கீதம் 119:33-34, நெகேமியா 8:13)?
- பேசப்படும் வசனம் உண்மையாக இருக்கக்கூடும் என்று எண்ணி அதை ஏற்றுக்கொள்கிறேனா?
(அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11)
- பின்பு தனியாகத் தேவனோடு இருந்து அவைகளைக் குறித்துச் சிந்திக்கும்படி, வேதப்பகுதிகளையும்
முக்கியக் குறிப்புகளையும் எழுதிவைக்கிறேனா?
- விஷயங்கள் இப்படியிருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கும்படி, நேரம் எடுத்து என் குறிப்புகளை
மறுபடியும் எடுத்து, தேவனுடைய வார்த்தைகளை ஆராய்ந்து, வேதவசனத்தை வேதவசனத்தோடு ஒப்பிட்டுப்
பார்க்கிறேனா (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11)?
- இந்த வேதப்பகுதிகளைக் கேட்டு ஆராய்ந்ததன் விளைவாக, குறிப்பிட்ட ஒரு செயலை நான்
செய்திருக்கிறேனா (யாக்கோபு 1:25)?
← வசனத்தை உட்கொள்ளுதல் பக்கத்திற்குத் திரும்பு