தேவனுடைய வசனத்தை வாசியுங்கள்

“இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும்,
இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத்
தன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்வதற்கு,
அவன் லேவியர்களாகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண புத்தகத்தைப்பார்த்து,
தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு,
தன் உயிருள்ள நாட்களெல்லாம் அதை வாசிக்கவேண்டும்;”
உபாகமம் 17:19-20

ஒரு ராஜாவைக் குறித்துத் தேவன் தம்முடைய மக்களுக்குக் கட்டளை கொடுத்தபோது, அவர் இதைத் தெளிவாக்கினார்: ராஜா சிங்காசனத்தில் ஏறியவுடனே, தேவனுடைய வசனத்தின் ஒரு பிரதியைத் தனக்காகத் தானே எழுதி, அதைத் தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் வாழ்நாளெல்லாம் தினமும் அதை வாசிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ளவேண்டும். அதன் மூலம் ராஜா தன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படக் கற்றுக்கொள்வான். ஆகவே இன்று நாமும் தேவனுக்குப் பயப்படக் கற்றுக்கொள்ள விரும்பினால், தேவனுடைய வசனத்தைத் தினமும் வாசிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ளவேண்டும்!

தேவனுடைய வசனத்தைத் தினமும் வாசியுங்கள்!


உபாகமம் 8:3-இல் தேவன் சொல்லுகிறார்:

“…மனிதன் உணவினால் மாத்திரம் அல்ல,
யெகோவாவுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்
பிழைப்பான்…”
உபாகமம் 8:3

தேவன் பேசின வார்த்தைகளில், நம்முடைய ஆத்துமாவுக்குப் பயனில்லாத வார்த்தை ஏதாவது உண்டா? இந்த வசனத்தில், ஒவ்வொரு வார்த்தையும் மனிதன் பிழைப்பதற்கு உதவுகிறது என்று தேவன் சொல்லுகிறார்.

ஒவ்வொரு வார்த்தையையும் வாசியுங்கள்!


“தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்…”
நீதிமொழிகள் 30:5a
“வேத வாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது;
தேவனுடைய மனிதன் தேறினவனாகவும்,
எந்த நல்லசெயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
அவைகள் உபதேசத்திற்கும், கடிந்துகொள்ளுதலுக்கும்,
சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும்
பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கிறது.”
2 தீமோத்தேயு 3:16-17

வேத வாக்கியங்களெல்லாம் இரண்டு தன்மைகளையும் உடையவை என்று இந்த வசனத்தில் தேவன் சொல்லுகிறார்: #1 தேவனால் அருளப்பட்டவை, #2 பிரயோஜனமுள்ளவை. பரிசுத்த வேதாகமத்தில் எவ்வளவு பகுதி தேவனால் அருளப்பட்டது? முழுவதும்! பரிசுத்த வேதாகமத்தில் எவ்வளவு பகுதி நமக்குப் பிரயோஜனமுள்ளது? முழுவதும்! அப்படியானால் பரிசுத்த வேதாகமத்தில் எவ்வளவு பகுதியை நாம் வாசிக்கவேண்டும்? முழுவதையும்!

முழு வேதாகமத்தையும் வாசியுங்கள்!


இப்படி எழுதியிருப்பதால்:

ஆகவே நம்முடைய வாழ்நாளின் எல்லா நாட்களிலும் முழு வேதாகமத்தையும் வாசிக்க நாம் முயற்சிப்போமாக!

மேலே சொல்லப்பட்டவைகளின் அடிப்படையிலும், இது உண்மை என்று விசுவாசிப்பதாலும், வாசகருக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு பின்வரும் ஆலோசனைகளைத் தருகிறோம்:


தொடர்புடைய கட்டுரைகள்

← வசனத்தை உட்கொள்ளுதல் பக்கத்திற்குத் திரும்பு