பின்வரும் கேள்வியை வேதவசனங்களைக் கொண்டு ஆராய்ந்துபார்க்கும்படி இந்தக் கட்டுரை வாசகருக்குச் சவால்விடுகிறது: ஒவ்வொரு வாரமும் ஒரு போதகர் மட்டுமே பிரசங்கிக்கவேண்டுமா – அல்லது (பேசும்படி பரிசுத்த ஆவியானவர் ஆண்களை நடத்துகிறபடி) எல்லா ஆண்களிடமிருந்தும் போதனை வரவேண்டுமா? தயவுசெய்து பின்வரும் வேதப்பகுதியைக் கவனியுங்கள்:
ஒவ்வொருவருடைய தனிப்பட்ட பங்களிப்பின் மூலமும் சபை பக்தியில் வளர்ச்சியடைவதே இதன் நோக்கம் என்பது மிகவும் தெளிவாக இருந்தது (1 கொரிந்தியர் 14:5,16). எபேசு சபைக்குப் பவுல் எழுதின கடிதத்திலும் இது மறுபடியும் தெரிகிறது:
“தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப்” பகிர்ந்துகொடுப்பதன் மூலம் சபை கட்டியெழுப்பப்படும்படி, தேவன் வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு வரங்களைக் கொடுத்தார் (1 பேதுரு 4:10). தேவனுடைய வெவ்வேறு வரங்கள் எல்லாம் ஒரே மனிதனிடம் இல்லை. ஆகவே கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்பும் முழு வேலையையும் ஒரே மனிதன் செய்யமுடியாது. சரீரம் ஒன்றாகச் செயல்படவேண்டியதன் அவசியத்தைப் பவுல் 1 கொரிந்தியர் 12-இல் மறுபடியும் வலியுறுத்துகிறார்:
முதன்மையாக இருக்க, அல்லது கூட்டத்தின்மேல் ஆதிக்கம் செலுத்த விரும்பிய தியோத்திரேப்பு என்ற ஒரு மனிதனின் உதாரணம் இங்கே இருக்கிறது. ஒரே நபர் முழுச் சபையையும் வழிநடத்துவது ஆபத்தானது. அது ஒருவரையொருவர் சரிபார்த்து சமநிலைப்படுத்துவதற்கு இடம் கொடுப்பதில்லை. (அமெரிக்க) அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர்கள்கூட, ஒன்றாகச் சேர்ந்து தலைமை தாங்கும் ஒரு மனிதர் குழுவாகிய மூப்பர் சங்கம் (presbytery) என்ற கருத்தின் அடிப்படையிலேயே அந்த அமைப்பை உருவாக்கினார்கள். சபையின் மூப்பர்களுக்குப் பேதுரு கொடுத்த அறிவுரை, “உங்களிடம் உள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து” (1 பேதுரு 5:2), ஆனால் “சுதந்திரத்தை பெருமையோடு ஆளுகிறவர்களாக இல்லை, மந்தைக்கு முன்மாதிரிகளாகவும்” இருக்கவேண்டும் என்பதே (1 பேதுரு 5:3).
வாரந்தோறும் ஒன்றுகூடி வருவதன் காரணம் இவைகள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்: (1) அப்பம் பிட்குதல் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:42), (2) ஜெபம், (3) அப்போஸ்தலர்களுடைய உபதேசம், (4) அன்புக்கும் நல்ல செய்கைகளுக்கும் ஒருவரையொருவர் ஊக்குவித்துப் புத்திசொல்லுதல் (எபிரெயர் 10:24-25), (5) பாடல்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லுதல்:
இல்லை. அவ்வப்போது ஒருவர் ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள சபைக்கு வந்து பேசியதாகத் தெரிகிறது. இதற்கு ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம், துரோவாவிலிருந்த சபைக்குப் பவுல் பிரசங்கித்தது. வாரத்தின் முதல்நாளில் அப்பம் புசிக்கும்படி அவர்கள் கூடிவந்தார்கள்; பவுல் “அவர்களோடு பேசி, நடுராத்திரிவரைக்கும் பிரசங்கித்தான்” (அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:7).
ஆனால் ஒரே நபர் மட்டும் ஒவ்வொரு வாரமும் பிரசங்கித்து, ஒருவரையொருவர் ஊக்குவித்துப் புத்திசொல்லவோ, மற்றவர்களிடமிருந்து கேட்கவோ வாய்ப்பே இல்லையென்றால், தேவன் நியமித்த விதத்தில் சரீரம் பக்தியில் வளர்ச்சியடைவதில்லை. மேலும், “ஏமார்ந்துபோகாமல் இருங்கள், தேவன் தம்மைப் பரிகாசம்பண்ண விடமாட்டார்; மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” (கலாத்தியர் 6:7). நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம். தேவனுடைய வசனத்திலுள்ள போதனைகளை நாம் கவனமாகப் பின்பற்றாவிட்டால், சபை பாதிக்கப்படும். அவர் நியமித்தபடியே காரியங்களைச் செய்யும் கீழ்ப்படிதலிலிருந்து மட்டுமே சபையின் உண்மையான வளர்ச்சி வரமுடியும் (யோசுவா 1:8, சங்கீதம் 37:23, 1 கொரிந்தியர் 14:40).
இங்கே எழுதப்பட்டிருப்பதை நீங்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டும் என்பதும், பெரோயா பட்டணத்தாரைப்போல, விஷயங்கள் இப்படியிருக்கிறதா என்று தினமும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்க்கவேண்டும் என்பதுமே எங்கள் ஜெபம்: