தேவனுடைய வசனத்தைத் தியானியுங்கள்
தியானிப்பதற்குப் பல வழிகள் உள்ளன. இந்த முறை ஒவ்வொரு வசனத்தையும் ஒழுங்காக ஆராய்ந்து, அது பின்வருவனவற்றோடு
எப்படித் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது: அறிக்கையிடவேண்டிய அல்லது விலக்கவேண்டிய பாவங்கள், தேவனுடைய
வாக்குத்தத்தங்கள், பின்பற்றவேண்டிய மாதிரிகள், கீழ்ப்படியவேண்டிய கட்டளைகள், தேவனைப் பற்றி நாம் பெறக்கூடிய அறிவு.
நாம் செய்யும் எல்லாவற்றிலும் எப்படி ஆசீர்வதிக்கப்பட்டு வாய்க்கப்பெறலாம் என்பதை வேதாகமத்தின் மூன்று
வெவ்வேறு பகுதிகள் நமக்குச் சொல்லுகின்றன:
“துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும்,
பாவிகளுடைய வழியில் நிற்காமலும்,
பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து,
இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.
அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு,
தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து,
இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான்.
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.”
சங்கீதம் 1:1-3
“இந்த நியாயப்பிரமாண புத்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக;
இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்ய கவனமாக இருக்கும்படி,
இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக;
அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கச்செய்வாய்,
அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.”
யோசுவா 1:8
“ஆனால், சுதந்திரம் கொடுக்கிற பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து,
அதிலே நிலைத்திருக்கிறவன்
கேட்கிறதை மறக்கிறவனாக இல்லாமல்,
அதைச் செய்கிறவனாக இருப்பதினால்
அவன் பாக்கியவானாக இருப்பான்.”
யாக்கோபு 1:25
இந்த ஒவ்வொரு வசனத்திலும் உள்ள முக்கியமான அம்சம், தேவனுடைய வசனத்தைத் தியானிப்பது; அப்பொழுதுதான்
அதில் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நாம் செய்வோம்.
இந்த வசனங்களிலிருந்து இது தெளிவாகிறது: நாம் செய்யும் எல்லாவற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டு
வாய்க்கப்பெறவேண்டுமென்றால், தேவனுடைய வசனத்தைத் தியானிக்கவேண்டும். தியானிப்பதற்கான ஒரு நல்ல,
வேதாகமப்பூர்வமான முறை இதோ:
வேதாகமத்தில் ஒரு வசனத்தைத் தெரிந்தெடுங்கள். அதை உங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதி, மனப்பாடம் செய்து,
பின்பு பின்வரும் ஒவ்வொரு கேள்வியைக் குறித்தும் ஜெபத்தோடு சிந்தியுங்கள்:
1. பாவங்கள்
– விலக்கவேண்டிய பாவங்கள் ஏதாவது உண்டா?
“வேத வாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது;
தேவனுடைய மனிதன் தேறினவனாகவும்,
எந்த நல்லசெயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
அவைகள் உபதேசத்திற்கும்,
கடிந்துகொள்ளுதலுக்கும்,
சீர்திருத்தலுக்கும்,
நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கிறது.”
2 தீமோத்தேயு 3:16-17
2. வாக்குத்தத்தங்கள்
– உரிமைகோரவேண்டிய வாக்குத்தத்தங்கள் ஏதாவது உண்டா?
“இச்சையினால் உலகத்தில் உள்ள தீமைக்குத் தப்பி,
தெய்வீக சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாவதற்காக,
அதிக மேன்மையும் அருமையான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.”
2 பேதுரு 1:4
3. மாதிரிகள்
– நான் பின்பற்றக்கூடிய மாதிரிகள் ஏதாவது உண்டா?
“நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருங்கள்.”
1 கொரிந்தியர் 11:1
“இன்னவிதமாக எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே;…
நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாக இருக்கவேண்டுமென்றே அப்படிச்செய்தோம்.”
2 தெசலோனிக்கேயர் 3:7-9
4. கட்டளைகள்
– நான் கீழ்ப்படியவேண்டிய கட்டளைகள் ஏதாவது உண்டா? யோவான் 14:21-இல் இயேசு சொல்லுகிறார்:
“என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவைகளைக் கடைபிடிக்கிறவனே
என்னிடத்தில் அன்பாக இருக்கிறான்,
என்னிடத்தில் அன்பாக இருக்கிறவன்மேல்
என் பிதா அன்பாக இருப்பார்;
நானும் அவன்மேல் அன்பாக இருந்து,
அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்”
யோவான் 14:21
5. அறிவு
– தேவனைப் பற்றிக் கற்றுக்கொள்ள ஏதாவது உண்டா?
“தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும்
அறிந்துகொள்கிற அறிவின் மூலமாக
உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகட்டும்.”
2 பேதுரு 1:2
இந்த ஐந்து குறிப்புகளும் ஆங்கிலத்தில் “SPECK” என்ற நினைவுச்சொல்லை உருவாக்குகின்றன என்பதைக்
கவனியுங்கள் (Sins – பாவங்கள், Promises – வாக்குத்தத்தங்கள், Examples – மாதிரிகள்,
Commands – கட்டளைகள், Knowledge – அறிவு).
மேலே உள்ள கேள்விகளைக் குறித்து ஜெபத்தோடு சிந்தித்த பின்பு, தேவன் உங்களுக்குக் காட்டியதற்கு உங்கள்
நடைமுறையான பதில் என்ன? ஏனென்றால், வசனம் சொல்வதை நாம் செய்யும்படிக்கே அதைத் தியானிக்கிறோம்.
யாக்கோபு சொல்லுகிறார்: “…திருவசனத்தைக் கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, அதின்படி
செய்கிறவர்களாகவும் இருங்கள்.” (யாக்கோபு 1:22)
தொடர்புடைய கட்டுரைகள்
← வசனத்தை உட்கொள்ளுதல் பக்கத்திற்குத் திரும்பு